அஜித் குமார் கொலை வழக்கு : வீடியோவை வெளியிட்டதால் அச்சுறுத்தல் வருகிறது...! - டி.ஜி.பி யிடம் புகார்
Ajith Kumar murder case Threats are being received due to release video Complaint to DGP
சிவகங்கையில் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இதைத்தொடர்ந்து, அஜித்குமாரை காவலர்கள் பிரம்பால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை மக்களிடையே ஏற்படுத்தியது.
இந்த வீடியோ அஜித்குமார் மரண வழக்கின் முக்கியமான சாட்சியாக கருதப்படுகிறது.இந்நிலையில், அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன் தனக்கும், தனது குடும்பத்திற்கும அச்சுறுத்தல் இருப்பதாக டி.ஜி.பி.யிடம் புகாரளித்துள்ளார்.
மேலும், அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான காவலர் ராஜா சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவடன் தொடர்பில் இருப்பதாக சத்தீஸ்வரன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ajith Kumar murder case Threats are being received due to release video Complaint to DGP