சாவி கொடுத்தால் தான் ஆட முடியும்!! அண்ணாமலையை கலாய்த்த செல்லூர் ராஜூ.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் என அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "அண்ணாமலை ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். 

தமிழகத்தில் ஒரு சில பெரிய கோவில்களில் மட்டுமே வருமானம் வருகிறது. அதை நம்பி தான் சிறிய கோவில்கள் உள்ளன. வரும் வருமானத்தை அனைத்து கோயில்களுக்கும் பகிர்ந்து அளிக்க தான் அறநிலைத்துறை உள்ளது. 

எங்கள் ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டது. இந்த ஆட்சியிலும் அந்த துறையின் அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். நல்லா வேலை பார்த்தால் நாங்கள் நல்லா இருக்குன்னு தான் சொல்லுவோம். மற்ற துறை அமைச்சர்கள் எல்லாம் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்றால் இல்லை. ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். 

அண்ணாமலை சொல்வதனால் அறநிலையத்துறை இல்லாமல் போய்விடாது. அவர்கள் ஆட்சிக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம். எல்லாம் மேல சொல்றது தான், அவரா செய்ய முடியுமா? மத்தியில் சாவி கொடுத்தால் தான் மாநிலத்தில் ஆட முடியும். இதுக்கு தான் அரசியல் கருத்து கேட்காதீங்கன்னு சொன்னேன்" என அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Sellur Raju criticized BJP Annamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->