அதிமுக முன்னாள் அமைச்சரை கைது செய்ய தடை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேலும் ஆறு மாதங்கள் தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி பாலாஜி தொடர்ந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அதிமுக  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ஜாமின் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஇருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு தரப்பில், "இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருகிறது, விசாரணை முடிய 6 மாதம் காலம் ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை விரைவாக நடத்த தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். இடைப்பட்ட இந்த 6 மாதம் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கான தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

மேலும்,  வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவை பெறும்படியும் ராஜேந்திர பாலாஜிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK ex Minister case SC order 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->