அடுத்து என்ன? சென்னையில் ஒன்று கூடும் மாவட்ட புள்ளிகள்! அதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமையில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.8.2023 அன்று காலை 9 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என்று, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு வழக்கு, நாடாளுமன்ற தேர்தல், பாஜவுடனான கூட்டணி என பல்வேறு விவகாரங்கள் குறித்து, வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி, ஓபிஎஸ் உடன் இணைந்து டிடிவி தினகரன் நடத்த உள்ள போராட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனையை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK District Secretary meet August 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->