அன்பை மறைத்த பாசம்...! லெஸ்பியன் உறவுக்காக பச்சிளம் குழந்தையை பலியிட்ட தாய்...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பதறவைத்துள்ளது. அங்கு வசித்து வந்த 26 வயது இளம்பெண், கூலித்தொழிலாளியின் மனைவி. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன்பு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.கடந்த 4-ந்தேதி, குழந்தைக்கு பால் குடித்த சில நிமிடங்களுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தாய் கூறியுள்ளார்.

அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் உறவினர்கள் உடலை அடக்கம் செய்தனர்.இதன் சில நாட்களுக்குப் பிறகு, குழந்தையின் தாயின் செல்போனை அவரது கணவர் பார்த்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அதில், தாயும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் நெருக்கமான உறவில் இருப்பதை காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல், இறந்த குழந்தையின் புகைப்படத்தையும் அந்த பெண்ணுக்கு அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தையின் தந்தை கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், குழந்தையின் தாயும் அந்த இளம்பெண்ணும் ஓரினச் சேர்க்கை (லெஸ்பியன்) உறவில் இருந்தது தெரியவந்தது. குழந்தை அவர்களின் உறவுக்கு இடையூறாக இருப்பதாக, அந்த இளம்பெண் கூறியதையடுத்து, தாய் தானே குழந்தையின் மூக்கை அடைத்து மூச்சுத்திணறடித்து கொன்றது என்றும் போலீசார் கண்டறிந்தனர்.

போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், குழந்தையின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் தண்டர்சிப் தலைமையிலான மருத்துவக்குழு அங்கு நேரில் சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டு மீண்டும் புதைத்தது.சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Affection that hid love mother who sacrificed her baby lesbian relationship


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->