மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு என்ன ஆனது?!  - Seithipunal
Seithipunal


உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக எம்.பி சிவி சண்முகம் நேற்று முன்தினம் திடீர் உடல் நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் இரவு 8.45 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சிவி சண்முகத்திற்கு இதய சிகிச்சை சம்பந்தமான பிரச்சனை தொடர்பாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது.

மேலும், சி.வி.சண்முகத்துக்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், அமைச்சர் சிவி சண்முகம் சிகிச்சை முடிந்து நேற்று மாலையே வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவருக்கான சிகிச்சை விவரங்கள் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MP CV Shanmugam Discharge in Hospital june


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->