பொதுமக்களே மிஸ் பண்ணிடாதீங்க? மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal



மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்று இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். பொதுமக்கள் ஆதார் எண் இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்னும் 10 சதவீதம் இருப்பதால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாய்ப்பாக நாளை (பிப்ரவரி 28ம் தேதி) கடைசி நாள் என தமிழக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adhar link with EB connection Last day of tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->