சீமான் தொடர்ந்த வழக்கு - விஜயலட்சுமிக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சீமான் தொடர்ந்த வழக்கு - விஜயலட்சுமிக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.!

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னுடன் நெருக்கமாக பழகி விட்டு, பின்னர் ஏமாற்றி விட்டதாக தெரிவித்து இருந்தார்.

இந்தப் புகாரின் படி போலீசார் சீமான் மீது மோசடி, நம்பிக்கை துரோகம், கற்பழிப்பு என்று பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தப் புகாரை நடிகை விஜயலட்சுமி கடந்த 2012-ம் ஆண்டு திரும்ப பெற்று விட்டார். இந்த நிலையில், சீமான், விஜயலட்சுமிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, நடிகை விஜயலட்சுமி இரண்டாவது முறையாக புகார் செய்தார்.

அதன் படி மீண்டும் சீமான் மீது மற்றொரு வழக்கை வளசரவாக்கம் போலீசார் பதிவு செய்தனர். ஆனால், இந்த 2-வது புகாரையும் விஜயலட்சுமி திரும்ப பெற்றார். இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது,  நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் 2011-ம் ஆண்டு அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று போலீஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "போலீஸ் தரப்பில் இரண்டு பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை படித்து பார்த்த நீதிபதி, "இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று புகார்தாரர் விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும். அன்றே இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும்" என்று உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijayalakshmi apear in seeman case high chourt order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->