விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி - கண்கலங்கி நின்ற தருணம்.! - Seithipunal
Seithipunal


தேமுதிக நிறுவனரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜயகாந்த்  உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். இதையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இருவரும் சேர்ந்து கடந்த 1993 ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான செந்தூரபாண்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நடிகர் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் விஜய், விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்படும் போது சில வினாடிகள் கண்கலங்கி நின்று விட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor vijay tribute vijayakanth


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->