ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஒரு ஆன்மிக நிகழ்வு - நடிகர் ரஜினிகாந்த்.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் அயோத்திக்கு வந்திருந்தனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவோடு வருகை தந்திருந்தார். 

கோவில் பிரதிஷ்டைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி. நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். ஆண்டுதோறும் அயோத்திக்கு நிச்சயம் வருவேன்" என்று தெரிவித்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அயோத்தியில் இருந்து தனது குடும்பத்துடன் சென்னை திரும்பியுள்ளார். 

அப்போது அவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ராமர் கோயில் திறந்தபோது அதை நேரில் பார்த்தவர்களில் நானும் ஒவருன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதை அரசியல் நிகழ்வாக நான் பார்க்கவில்லை. ஆன்மிகமாகதான் பார்க்கிறேன். 

ஒவ்வொருவருடைய கருத்து இதில் மாறுபடலாம். நான் இதை ஆன்மிகம் என்று சொல்வேன். என் குடும்பத்திற்காக விஐபி இருக்கைக்கு பேசினேன் என்று சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajinikanth press meet in chennai airport after came ramar temple kumbabhisehgam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->