#Breaking || நடிகர் நாசர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


படப்பிடிப்பின்போது காயமடைந்த நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், குணசித்திர நடிகர், வில்லன் நடிகர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டு மக்கள் மனதில் நிற்பவர். 64 வயதாகும் நிலையில், இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் நாசர் இருந்து வருகிறார். இத்தகைய நிலையில், தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நாசருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் நாசர் படப்பிடிப்பில் காயமடைந்த பொழுது அவருடன் சுகாசினி, சியாஜி ஷிண்டே, மெஹரின் ஆகிய நடிகைகள் நடித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென நாசருக்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உடனடியாக நாசர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor nasar admitted in Hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->