பாரபட்சமின்றி நடவடிக்கை..கிட்னி திருட்டு புகார் தொடர்பாக மா.சுப்பிரமணியன் அதிரடி!
Action without bias Ma Subramanian takes strict action regarding the kidney theft complaint
கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில்,கவர்னர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மசோதாக்கள் மீது திருத்தங்கள் கொடுக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், கவர்னருக்கு அதிகாரம் இல்லாததால் அவரது பரிந்துரைகளை நிராகரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்
இதையடுத்து கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்சபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
இந்த நிலையில், அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது;”கிட்னி விற்பனை இப்போது மட்டுமின்றி முந்தைய காலங்களிலும் நடந்துள்ளது. நாமக்கல்லில் கிட்னி திருட்டு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இடைத்தரகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். புகாருக்குள்ளான இரண்டு மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கிட்னி திருட்டு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
புகாருக்குள்ளான மருத்துவமனைகளின் உரிமங்கள் பாகுபாடின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அத்துடன், உடல் உறுப்புகளை விற்பனை செய்வது தவறானது என விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் பேசினார்.
English Summary
Action without bias Ma Subramanian takes strict action regarding the kidney theft complaint