ஆடி 18 உள்ளூர் விடுமுறை : அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு வரும் மாதம் ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. 

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். 

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பணி நாளாக செயல்படும்".

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadi 18 local Hollyday in salem 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->