குரூப்-4 தேர்வு எழுதி சர்வேயர் ... கையும் களவுமாக சிக்கிய இளம்பெண்! - Seithipunal
Seithipunal


2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு எழுதி சர்வேயர் ஆன இளம்பெண் லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் பத்திரப்பதிவு, பட்டா பெயர் மாற்றம் போன்றவைகளில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது.

 நிலத்தை அளப்பது,, மின் இணைப்பு பெறுவது, மின் இணப்பு பெயர் மாற்றம் செய்வது, பட்டா வாங்குவது,  ஜாமீன் சான்றிதழ் வாங்குவதற்கு என பல்வேறு அரசு துறைகளில் சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி ஒரு நிலை சேலம் அரசு ஊழியருக்கு அரங்கேறி உள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவிதா . 28 வயதான இவர் கடந்த 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு எழுதி நில அளவையர்  பணியில் சேர்ந்தார். தற்போது இவர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உதவியாளராக கண்ணதாசன் என்பவர் உள்ளார்.

இந்த நிலையில் ஆத்தூர் தாலுகா துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரேசன்என்பவர் தான் வீட்டுமனை வாங்கி இருப்பதாகவும், அந்த மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தருமாறு நில அளவையர் ஜீவிதாவை அணுகினார். அதற்கு ஜீவிதா தனது உதவியாளரை சந்திக்குமாறு கூறியுள்ளார் . அப்போது அவரது உதவியாளர் கண்ணதாசன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வீட்டுமனை பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும் என்று கூறி உள்ளார்.

முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன் இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்த தன்பேரில் லஞ்ச ஒழிப்பு  போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை விவசாயி குமரேசனிடம் கொடுத்து சர்வேயரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று சென்ற குமரேசன், லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை நில அளவையர் ஜீவிதா, கண்ணதாசன் ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நில அளவையர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய 2 பேரையும் கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் பெண் நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young woman caught in the act of theft while writing the Group-4 exam


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->