#கோவை || பெண் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் ஆலங்கும்பை பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள்(30). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடனடி குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கண்ணியம்மாள் இரண்டு வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

இந்நிலையில் சரவணனுக்கும் கண்ணியமாவுக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சரவணன் மூன்று மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் வாழ்க்கையே வெறுத்த கண்ணியம்மாள், மன வேதனையில் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், கண்ணியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A women suicide in kovai


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->