மெரினா நீலக்கொடி கடற்கரையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி..உற்சாகமாக கண்டுகளித்த மக்கள்!
A traditional art performance on the Marina Blue Flag Beach people watched it with great enthusiasm
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி
கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடுபாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மெரினா கடற்கரை,
பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட அனைத்து
கடற்கரைப் பகுதிகளில் மக்களின் வசதிக்காகவும், சிறந்த சுற்றுச்சூழலை
ஏற்படுத்திடும் வகையிலும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளும்,
மேற்கொள்ளப்பட்டு தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரையில், மொரினா நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதியில்
உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்றுக்கான மேம்பாட்டுப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த நீலக்கொடி கடற்கரைப் பகுதிக்கு, மக்கள்
பெருமளவில் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இங்கு வரும் மக்களின்மகிழ்விற்காகவும், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு
செல்லும் வகையிலும், இந்த கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும்
கலைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும்
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினாவில் உள்ள நீலக்கொடி
கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள
நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் 21.09.2025 அன்றும்,
05.10.2025 அன்றும் சிறப்பாக நடைபெற்றது.இந்த கலை நிகழ்ச்சியினை ஆயிரக்கணக்கான பொதுமக்கள்பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
அதன் தொடச்சியாக இன்றுதமிழ்நாட்டில் பல்வேறுபகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றது.இந்த கலை நிகழ்ச்சியில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி செல்லச்சாமி
கலைக்குழுவினரின் வெற்றியை கொண்டாடும் வீரர்களின் நடனம், தாளம்,
அசைவுகள், உற்சாகம் நிறைந்த பாரம்பரிய கலை தேவராட்டமும்,
திருநெல்வேலி முகமது சுபஹான் கலைக்குழுவினரின் தமிழரின் பழம்பெரும்
போர்க்கலை. சிலம்பின் சுழலும் ஒலி வீரத்தை வெளிப்படுத்தும்
சிலம்பாட்டமும், தஞ்சாவூர் வினோத் கலைக்குழுவினரின் தப்பின் தாளத்தில்
ஆடும் உற்சாக நடனம் கொண்டாட்டங்களின் முக்கிய கலையான
தப்பாட்டமும், தர்மபுரி மாவட்டம் ஸ்ரீதரன் கலைக்குழுவினரின் கோயில்
திருவிழாக்களில் ஒலிக்கும் இரட்டை முரசு இசை, ஆனந்தம் மற்றும் பக்தி
கலந்த கலையான பம்பை வாத்தியமும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம்
முருகன் கலைக்குழுவினரின் கொங்கு மண்டல பகுதிகளில் திருவிழாக்களில்
பெரிய மேளங்களை அடுத்துக் கொண்டும் இசைக்கு ஏற்றவாறு ஒரு குழுவினர்
ஆடப்படும் ஆட்டம் துடும்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும் சிறப்பாக
நடைபெற்றது.
இந்த கலை நிகழ்ச்சிகளில் 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று
சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மூன்று மணி நேரம் மெரினா
நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சியினை
நேரடியாக ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும்ஞாயிற்றுக்கிழமையன்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில்
நடத்தப்படுகிறது.
English Summary
A traditional art performance on the Marina Blue Flag Beach people watched it with great enthusiasm