இடுகாட்டிற்கு செல்லும்  பாதையை மறைத்து தனி நபர் சுற்று சுவர் கட்ட முயற்சி... தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


இடுகாட்டிற்கு செல்லும்  பாதையை மறைத்து தனி நபர் சுற்று சுவர் கட்ட முயற்சி நடந்ததையடுத்து தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44- வது வார்டு சின்னவண்ணன் விளை பகுதி ஊர் பொதுமக்கள் சுமார் 33 - ஆண்டுகளுக்கு மேலாக சின்ன வண்ணான் விளை ஊருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் உள்ள இடுகாட்டிற்க்கு (வாக்கால் உரிமை பெற்ற ) ஒரு பாதை வழியாக ஊரில் இறந்த சடலங்களை கொண்டு நல் அடக்கம் செய்து வந்துள்ளதாகவும். 

தற்போது அந்த இடுகாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கல்லறைகள் அப்பகுதியில் நினைவுச் சின்னங்களாக  அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் அந்த இடுகாடு அமைவதற்கு இடம் கொடுத்த நபர் ஊர் பொதுமக்களுக்கு இடுகாட்டிற்கு செல்வதற்கு இந்த பாதை உரிமை பெற்றது என்று அந்த காலத்தில் தெளிவு படுத்தி வாக்கால் ஊரில் வசித்து வந்த  முன்னோர்களிடம் உறுதி அளித்தாக  தெரிவித்ததின் அடிப்படையில் தற்போது வரை ஊர் பொதுமக்கள் அந்த வழிப்பாதையை உபயோகப்படுத்தி வருதுதாகவும்,  

தற்போது இந்த ஊர் இடு காட்டிற்க்கு எதிரே அருகில் உள்ள மனையின் உரிமையாளரான ராஜமணி வாரிசுகளான முத்தரசு, தினேஷ் என்பவர்கள் அவர்களுடைய வரைபட அளவின்படி  சுற்று சுவர் எழுப்பாமல் ஊர்  இடு காட்டிற்கு செல்லும் பாதையை சேர்த்து இடுகாட்டை சுற்றி போடப்பட்டிருந்த பென்சிங் கம்பி, முள் வேலி, மற்றும்  கதவுகளையும் தினேஷ்,  முத்தரசு மற்றும் அடியாட்க்கள் எடுத்து சென்று விட்டு அவர்கள்  சுற்றுச்சுவர் கட்டி எழுப்புவதை அறிந்த ஊர் பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி  13.07.2025- ஆம் தேதி இடு காட்டு வழி பிரச்சனை குறித்து நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் , தமிழக முதலமைச்சர்க்கும் ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதுவும் பரிசீலனையில் இருந்து வருகின்ற நிலையில் ராஜ மணியின் வாரிசுகளான முத்தரசு மற்றும் தினேஷ் என்பவர்கள் இன்றும் அடியாட்க்களுடன் வந்து சுற்று சுவர் கட்டு வதற்க்கான முயற்சியில்  ஈடுபட்டதை  அறிந்த சின்ன வண்ணன் விளை ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இடு காட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு நடை பெற்றுக் கொண்டிருந்த கட்டிட பணியை தடுத்து நிறுத்தினர்.

 சம்பவம் அறிந்த நேசமணி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி 44 வது வார்டு உறுப்பினரும் வழக்கறிஞரும் மான  நவீன் குமார் தலைமையில் இரு தரப்பினரிடமும் சமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பினரும் நேசமணி நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படியும் அதுவரையிலும் கட்டிட பணியை மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது 

இதனால் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A private individual attempted to build a surrounding wall by blocking the path to the public area The local residents intervened and engaged in a protest


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->