முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட பிறந்த குழந்தை.. விசாரணையில் சிக்கிய தாய்..! - Seithipunal
Seithipunal


குழந்தையை முட்புதரில் வீசி சென்ற பெண்ணை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. அதனை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குழந்தையை வீசி எறிந்தது யார் என்பது குறித்து கண்டறிந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த ராணி ரயிலில் சென்ற போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அவருடைய அக்கா சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆன கண்டறிந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து சென்ற காவல்துறையினர் ஜோஸ்ராணியின் அக்காவிடம் விசாரணை மேற்கொண்டர். அப்போது குழந்தையை வீசி சென்ற ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது தங்கைக்கு திருமணம் ஆகவில்லை ஓடும் ரயிலில் குழந்தை பிறந்தது.

 ரயில் சிக்னலுக்காக நிற்க பொழுது குழந்தையை முட்புதரில் வீசி சென்றேன் என தெரிவித்தார். மருத்துவமனையில் இருந்த குழந்தையை தாய் ராணியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A mother caught up in the investigation of a newborn baby found in a bush


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->