தனியார் தொழிற்சாலையில் மாமூல் தகராறு.. விசிக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் அருகே உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி, அந்த தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) துணைச் செயலாளர் எஸ்.கே.குமார் மீது தொழிற்சாலை நிர்வாகி விஸ்வநாதன் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மணவாள நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, எஸ்.கே.குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லாவின் பரிந்துரையின் பேரில், திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின்படி எஸ்.கே.குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் திருவள்ளூர் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

இதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், எஸ்.கே.குமார் டவேரா வேனில் மூவருடன் தொழிற்சாலை முன்பு வந்து இறங்குவது, நிர்வாகியை வெளியே வரவழைத்து பேசுவது, பின்னர் நிர்வாகி கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசிக பிரமுகர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது, திருவள்ளூரில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A minor dispute at a private factory The Goonda Act was applied against a Vishik leader


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->