"என் செல்லம், என் ராஜம், எழுந்து வா".. விபத்தில் பலியான மனைவியின் உடலை மடியில் கிடத்தி கதறியழுத கணவன்.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்து மீது மோதி விபத்தில் பலியான மனைவியின் சடலத்துடன், கணவர் நடத்திய பாசப்போராட்டம் தேனியில் கண்கலங்க வைத்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பி.சிபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் பெரியகுளம் நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். உறவினரின் வீட்டில் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக பத்திரிக்கை வைக்க சென்ற நிலையில், அங்குள்ள கைலாசபட்டி அருகே இருசக்கர வாகனம் சென்றுள்ளது.

இதன்போது, கம்பத்தில் இருந்த பெரியகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன் - மனைவி இருவரும் கீழே விழுந்த நிலையில், ராஜலட்சுமி அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளார்.

இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழக்க, தனது கண் முன்னே மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு ஜெயராமன் துடித்துப் போயுள்ளார். பின்னர் மனைவியின் உடலை மடியில் கிடத்தி, "என் செல்லம், என் ராஜம், எழுந்து வா.. வா லட்சுமி" என கதறியது, காண்போரை கண்கலங்க செய்தது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ராஜலட்சுமியின் உறவினர்கள், விரைந்து வந்து அவர்களும் சோகத்தில் அழுதது கண்கலங்க வைத்தது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர், பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். 

இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் பலியான ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Husband Cry Loudly Wife Died Accident in front of His in Periyakulam Near Theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal