OLX- யூஸ் பண்றிங்களா.? உஷார்.. 6 பேரை அப்பட்டமாய் ஏமாற்றி வசூல் வேட்டை செய்த பலே திருடன்.! - Seithipunal
Seithipunal


மதுரை கூடல் நகரில் ஒரே வீட்டை 6 பேருக்கு மேல் வாடகைக்கு விட்டு 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆனையூர் பகுதியில் மலர் நகர் என்ற இடத்தில் உள்ள ரோஜா தெருவை சார்ந்தவர் புகழ் இந்திரா. இவர் தனது இரண்டு வீட்டினை ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலமாகவும் புரோக்கர்கள் மூலமாகவும் ஒத்திக்கு விட்டு மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக பல நபர்கள் அளித்த புகாரையடுத்து காவல்துறை அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. ஒவ்வொரு நபர்களிடமும் 8 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கிவிட்டு வீட்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக தாமதப்படுத்தி இருக்கிறார்.

இதே போல கூறி மற்ற நபர்களிடமும்  நபர் ஒன்றுக்கு எட்டு லட்சம் ரூபாய் வரை  ஒத்திக்கட்டணமாக வசூல் செய்து இவர் மோசடியில் ஈடுபட்டிருப்பதை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதற்காக இவர் புரோக்கர்களையும் ஓஎல்எக்ஸ் இணையதளத்தையும் பயன்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக தற்போது வரை ஆறு நபர்கள் புகாரளித்துள்ள நிலையில்  மேலும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் கூடல் நகர் காவல் துறையே அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறது. இப்படி எல்லாம் மோசடி செய்யலாமா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தற்காலங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a house owner indulge in a scam using olx


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->