ஆன்லைன் சூதாட்ட விவகாரம்.!! தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்காணிப்பதற்கான குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன்,  உறுப்பினர்களாக டாக்டர் எம்.சி. சாரங்கன், ஐ.பி.எஸ். ஓய்வு, டாக்டர் சி.செல்லப்பன் - ஓய்வு பெற்ற பேராசிரியர், ஓ.ரவீந்திரன், விஜய் கருணாகரன் -இன்கேஜ் குழுமத்தின் நிறுவனர், ஆகியோரை கொண்ட ஆணையம் நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிப்பதற்கான குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

இந்தக் குழு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடையை மீறி விளையாடுபவர்கள் மீதும், சூதாட்டத்தில் பந்தயம் கட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த சட்டத்தினை அமல்படுத்த வழிவகை செய்யும் வகையில் இந்த குழு சுதந்திரமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A commission firmed to implement law prohibiting internet gambling in tn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->