சிறுமியை விபசாரத்தில் தள்ளிய கும்பல்: 9 பேர் கைது..வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


சிறுமியை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர்களான தஞ்சையைச் சேர்ந்த மலர்க்கொடி, தவக்கல் பாட்ஷா, ராதிகா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக16 வயது சிறுமி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தியதில்  அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.


அதில் தாய் இறந்துவிட்ட நிலையில் சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியை சந்தித்த பெண் ஒருவர், ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமிக்கு உதவி செய்வதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து  அந்த பெண், ஓரிரு நாட்கள் கழித்து அந்த சிறுமியை தஞ்சைக்கு வருமாறு கூறியுள்ளார். தனக்கு ஒரு வேலை கிைடக்கும் என்ற நம்பிக்கையில் ஆசை, ஆசையாக தஞ்சைக்கு சென்ற சிறுமியை அந்த பெண் படுபாதாளத்தில் தள்ளி உள்ளார்.

அந்த பெண். சிறுமியை விபசாரத்தில் அந்த பெண் ஈடுபடுத்தி உள்ளார். பல மாதங்கள் பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை விபசாரத்துக்கு அந்த பெண் அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

கர்ப்பமானவுடன் அந்த சிறுமியை அந்த பெண் மன்னார்குடிக்கு அனுப்பி வைத்து விட்டார்.  இதனை தொடர்ந்து மன்னார்குடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை சீரழித்தவர்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் பகுதியை சேர்ந்த கனகராஜ், தினேஷ் செல்வகுமார்  மற்றும் திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜ்குமார், சக்திவேல் மற்றும் மதுக்கூரை அடுத்த வாட்டாக்குடியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சிறுமியை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர்களான தஞ்சையைச் சேர்ந்த மலர்க்கொடி, தவக்கல் பாட்ஷா, ராதிகா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

9 arrested for prostitution of minor girl Sensational news released


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->