'மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை'...! - தவெகவின் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு அரசாணை வெளியீடு...! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்த அண்ணன் சீர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருமணம் செய்துகொள்ளும் தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப்புடவையும் சீர்வரிசையாக வழங்கப்பட உள்ளன. இதற்காக முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விண்ணப்ப நடைமுறைகள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் பயனாளிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் சார்பில் சீர்வரிசை வழங்கும் வகையில் அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்திருந்தது. இதன்படி, தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த அக்டோபர் 5-ந்தேதி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் முறைப்படி சீர்வரிசை வழங்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் முதற்கட்டச் செயலாக்கத்திற்காக தமிழக அரசு ரூ.812 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், தேர்தல் வாக்குறுதியில் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசாணையில் அது ரூ.2.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், அக்டோபர் 5-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் திருமணங்களுக்கே இத்திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணன் சீர் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தனி இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் தகுதிகள், தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைச் சமூக நலத்துறை தனியாக வெளியிட உள்ளது.

அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்களை எப்போது, எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது குறித்த முழுமையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் விரைவில் திருமணம் நடைபெறவுள்ள தகுதியுடைய மணப்பெண்கள் திட்டத்தின் பலனைப் பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

எனவே, விண்ணப்பங்களுக்கான இணையதளத்தை விரைவில் தொடங்கி, திட்டத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 grams of gold and silk for brides Government order issued for Tvk Annan Seer project


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->