பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - விமானப்படை தளபதி சொல்கிறார்!
6 warplanes of Pakistan were shot down says the Air Force Chief
ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படைத் தளபதி அமர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் உலக நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்தது.இதையடுத்து மத்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.குறிப்பாக சிந்து நதி நீரை நிறுத்தியது.அதனை தொடர்ந்து பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 6 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இந்த நிலையில், இந்திய விமானப்படையின் தாக்குதலில் எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற விவரத்தை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி அமர்ப்ரீத் சிங் வெளியிடுள்ளார்.
அவர் கூறியதாவது:"பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் 5 போர் விமானங்கள், மற்றொரு விமானம் மிகப் பெரிய அளவிலான ராணுவ விமானமாகும். ஜகோபாபத் விமானத் தளத்தில் ஹேங்கரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எப்-16 ரக போர் விமானங்களும் விமானப்படைத் தாக்குதலில் சுக்கு நூறாக நொறுங்கின. இந்தத் தாக்குதல் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது" என தகவல் தெரிவித்தார்.
English Summary
6 warplanes of Pakistan were shot down says the Air Force Chief