பாதுகாப்பு கெடுபிடியால் சிக்கிய ரூ.5 கோடி போதைப்பொருள் 'கிரிஸ்டல் மெத்'...! - ஏர்போர்ட்டில் பார்சலை வீசிவிட்டு எஸ்கேப் ஆன கடத்தல் கும்பல்...!
5 crore worth crystal meth seized due security measures smuggling gang escaped by throwing parcel airport
விமான நிலைய வளாகத்தில் உரிமையாளர் யாரும் இல்லாமல் சந்தேகத்திற்கிடமாக கிடந்த ஒரு பார்சல், பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து அந்த பார்சல் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது, பார்சலின் உள்ளே மிகுந்த ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கிரிஸ்டல் மெத் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
முதற்கட்ட ஆய்வில், சரக்கு விமானத்தின் மூலம் அந்த போதைப்பொருள் மலேசியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதை உணர்ந்த கடத்தல் கும்பலினர், சந்தேகம் ஏற்படாமல் தப்பிக்க அந்த பார்சலை அங்கேயே கைவிட்டு தப்பியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கிரிஸ்டல் மெத் போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் முயற்சியின் பின்னணியில் செயல்பட்ட நபர்கள் மற்றும் வலையமைப்பை கண்டறியும் நோக்கில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பறிமுதல் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
5 crore worth crystal meth seized due security measures smuggling gang escaped by throwing parcel airport