புதுச்சேரி பதற்றம்: தங்கை குளிப்பதை எட்டிப்பார்த்த புதுமாப்பிள்ளை: அடித்துக்கொலை செய்த அண்ணன் மற்றும் கூட்டாளிகள்..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி பாகூர் அருகே கரையாம்புத்தூர்-பனையடிக்குப்பம் ரோட்டில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன்குட்டை கொட்டகையில் வாலிபர் ஒருவர் நேற்று காலை ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளார். 

விசாரணையில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தவர் பனையடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு (வயது 34) வெல்டிங் தொழிலாளி என தெரியவந்துள்ளது. பின்னர் அவரை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜகுரு இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். பின்னர்  ராஜகுருவை அடித்து கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (27) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜகுருவை அடித்து கொலை செய்ததாக தினேஷ் பாபு அதிர்ச்சியளித்துள்ளார். இது சம்பந்தமாக தினேஷ்பாபு மற்றும் அதே பகுதியை சேர்ந்த சர்மா (24), முகிலன் (20), சுமித் (20), கரையாம்புத்தூர் அச்சுதன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில் ராஜகுருவை அடித்து கொலை செய்தது ஏன் என்பது குறித்து தினேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது, அவரது தங்கையை திருமணம் செய்து கொடுத்துள்ள நிலையில், கணவர் வீட்டில் தங்கை குளித்ததை மாடியில் இருந்து ராஜகுரு பார்த்துள்ளார். இதனை அறிந்த போது ராஜகுரு மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. இதனால் தனது கூட்டளிகளுடன் சேர்ந்து ராஜகுருவை அடித்து கொலை செய்தேன் என்று  வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அத்துடன், அந்த பகுதியில் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடித்து கொலை செய்யப்பட்ட ராஜகுருவும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 arrested for beating and killing a newlywed who watched a young woman take a bath in Puducherry


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->