நல்லெண்ண அடிப்படையில் புழல் சிறையில் இருந்த 40 கைதிகள் விடுதலை.! - Seithipunal
Seithipunal


நல்லெண்ண அடிப்படையில் புழல் சிறையில் இருந்த 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள், 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி புழல் சிறையில் நீண்டகாலமாக இருந்த 40 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அதேபோல், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து தற்போது 40 கைதிகள் விடுதலையாகினர்.

மேலும் மாவட்ட சிறைச்சாலைகளில் இருந்து ஏராளமான கைதிகள் நன்னடத்தை விதிகள்படி விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 prisoners released in Puzhal jail


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->