பர்சில் இருந்து ரூ.2,000 அபேஸ்... 2 திருநங்கைகள் உட்பட 4 பேர் கைது..!!
4 people including 2 transgenders arrested in theft case
சென்னை அடுத்த நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் யமுனா இவர் நேற்று முன்தினம் பாலவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக சென்று உள்ளார். அதற்காக அவர் பள்ளியின் நுழைவு வாயிலில் காத்திருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த 2 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண் யமுனாவிடம் வந்து பணம் கேட்டுள்ளனர்.

அப்பொழுது யமுனா தனது பரிசில் இருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்துள்ளார். அப்பொழுது திருநங்கைகள் பர்சுக்கு திருஷ்டி சுற்றி ஆசீர்வாதம் செய்வதாக கூறி அதிலிருந்து ரூ.2000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் யமுனா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெரம்பூர் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த திருநங்கை சந்துரு என்கிற கிருத்திகா, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த திருநங்கை திரிஷா என்கிற தினகரன், பேஷன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோகுல்தாஸ், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் கௌரி ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரை நீலாங்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
English Summary
4 people including 2 transgenders arrested in theft case