இலங்கையில் இருந்து 4  பேர் அகதிகளாக தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.

அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அது போல் இதுவரையிலும் தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து 120-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். அங்கிருந்து மண்டபம் கடலோரகாவல் நிலையம் வந்துள்ளனர். அவர்களிடம் கடலோர போலீசார் மற்றும் மத்திய மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people from Sri Lanka arrived in Tamil Nadu as refugees


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->