வார விடுமுறை எதிரொலி - தமிழகத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


வார விடுமுறை எதிரொலி - தமிழகத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்களின் வசதிக்கேற்ப வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக்கு கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்கு சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 8ம் தேதி அன்று வழக்கமாக இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

அதுமட்டுமல்லாமல், பல்வேறு இடங்களிலிருந்து அதாவது திருச்சி, கும்பகோணம், தஞ்சை, கோவை, மதுரை, திருப்பூர் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆக மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேருந்து எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு http://www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

250 special bus run in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->