வேலூர் மாவட்டத்திற்கு மே 14ல் உள்ளூர் விடுமுறை.!!
Local holiday on may14 to Vellore districts
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கமாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஏற்ப மாற்று தேதியில் வேலை நாட்கள் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்திற்கு வரும் மே 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோவிலின் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வரும் மே 14ஆம் தேதி கெங்கையம்மன் கோவில் திருவிழாவின் சிறப்பான சிரசு ஊர்வலம் நடைபெறுவதால் வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
Local holiday on may14 to Vellore districts