தகாத உறவால் நடந்த கொடூரம்; திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய 52 வயது பெண்ணை கொலைச் செய்த 21 வயது இளைஞர்; சிவகங்கையில் அதிர்ச்சி..!
21 Year Old Man Murders 52 Year Old Woman for Pressuring Him to Marry Her Amidst Illicit Relationship
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள சொட்டத்தட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 52 வயதான இவர் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த மாதம் 11ஆம் தேதி வேலைக்குச் சென்ற இவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனால், அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், சரஸ்வதியைத் தேடி வந்துள்ளனர். அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், மதுரை மாவட்டம் கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதே ஆன சரவணக்குமாருடன் அவர் அடிக்கடி பேசி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே தனிப்படை அமைத்து சரவணக்குமாரைப் பிடித்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது சரவணனிடம் இருந்து திடுக்கிடும் தகவலை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரே இடத்தில் கட்டட தொழிலாளிகளாக இருவரும் வேலை பார்த்ததால், சரஸ்வதியுடன் அடிக்கடி பேசி வந்ததாகவும், மற்றபடி வேற எந்த தொடர்பும் இல்லை எனவும் முன்னர் சரவணகுமார் கூறியுள்ளார். ஆனால், அவருடைய பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது பாணியில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அப்போது, சரஸ்வதியை நான் தான் கொலை செய்தேன் என சரவணன் ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, சரஸ்வதியும், சரவணக்குமாரும் ஒரே கட்டடத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக இருந்துள்ளனர். அடிக்கடி சரவணன் சரஸ்வதியிடன் தனிமையில் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சரஸ்வதி வயது குறித்து கூட ஜோசிக்காமல் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி சரவணக்குமாரை வற்புறுத்தி உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் 21 வயதான தான் எப்படி, 52 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என யோசித்த சரவணன், ஓவர் திருமண அழுத்தத்தால் இருந்துள்ளார். இதனை அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று தன்னை சந்திக்க வந்த சரஸ்வதியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உலகாணி அருகே உள்ள காட்டுப் பகுதியில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது திருமணப் பேச்சு தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் சரவணக்குமார் அவரை கடுமையாக தாக்கியதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சரஸ்வதியின் உடலில் கல்லை கட்டி அருகில் இருந்த குவாரி பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டு, சரவணக்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள 100 அடி ஆழ பள்ளத்தில் போலீசார் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது நூறடி ஆழத்திலும் தண்ணீர் இருந்ததால் கடலில் முத்துக்குளிப்பில் ஈடுபடுபவர்களை வரவழைத்து, சரஸ்வதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கூடக்கோவில் போலீசார் சரவணக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
வயது வரைமுறையின்றி கூட வேலை பார்த்த 52 வயது பெண்ணுடன் 21 வயது இளைஞர் தகாத உறவில் இருந்து மட்டுமல்லாமல், திருமண செய்ய வற்புறுத்திய குறித்த பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
21 Year Old Man Murders 52 Year Old Woman for Pressuring Him to Marry Her Amidst Illicit Relationship