தொகுதி மாறி போட்டியிடும் பாஜகவின் இரு முக்கிய தலைவர்கள்..?
Two Key BJP Leaders Contesting from Different Constituencies
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இதில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 04 தொகுதிகளில் வெற்றியீட்டியது.
அதன்படி, நாகர்கோவில்-எம்.ஆர். காந்தி, கோவை தெற்கு-வானதி சீனிவாசன், திருநெல்வேலி-நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி -சி.கே. சரஸ்வதி ஆகியோர் கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், இன்று 2026 தேர்தலுக்கான தொகுதிகள் பங்கீட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதில், நயினார் நாகேந்திரன் வென்ற திருநெல்வேலி, வானதி சீனிவாசன் வென்ற கோவை தெற்கு ஆகிய இரு தொகுதிகள் இடம் பெறவில்லை.
ஏற்கனவே பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் தொகுதி மாறுவதற்கு திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்றைய அறிவிப்பில் அவர்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
Two Key BJP Leaders Contesting from Different Constituencies