கடவுளையும் விட்டு வைக்கவில்லை; சபரிமலை தங்க திருட்டு வழக்கு குறித்து கேரள இடதுசாரி அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர்..! - Seithipunal
Seithipunal


சபரிமலை தங்க திருட்டை சுட்டி காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேரள இடதுசாரி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளாவில் இடதுசாரிகள் அரசு கடவுளையும் விட்டு வைக்காமல் நகைகளை திருடி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரையை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது தாயார் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால்,ராகுல் காந்தியின் கேரளா பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

அவருக்கு பதிலாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தேர்தல் பரப்புரையை தொடங்கிவைத்தார். அப்போது சபரிமலை தங்க திருட்டு விவகாரத்தை சுட்டிக்காட்டி இடதுசாரிகள் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், கேரள மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஒருமித்த குரலில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress leader criticizes the Leftist government of Kerala over the Sabarimala gold theft case


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->