2026 ல் ''புதிய கட்சி''... நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். 

சென்னை, வடபழனியில் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் எனது பெயர் இடம்பெறும். 

மக்களுக்கு போதுமான வசதிகள் கிடைப்பதில்லை. அதனால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்படும். 

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2026 New party actor Vishal announcement


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->