சாதி சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகள்.. கடுமையாக அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி என்ற பெண் எல்ஐசி நிறுவனத்தில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் பேரில் பணியில் சேர்ந்தார். அவரது சான்றுகளை சரிபார்க்க எல்ஐசி நிறுவனம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று கூறி அவருடைய சாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சான்றிதழை சரிபார்க்க சொல்லி மாநில அளவிலான குழுவுக்கு கடந்த 1998ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லலிதா குமாரியின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 2020இல் மாநில அளவிலான உறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பேரில், தனக்கு உரிய பதவி உயர்வுகளும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என லலிதா குமாரி தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். 

அவருக்கு பணி மற்றும் பண பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என எல்.ஐ.சி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாதி சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட மாநில அளவிலான சாதி சான்று சரிபார்ப்பு குழுவின் இந்த செயலுக்கு நீதிபதிகள் கடுமையான அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years Took For verifying community certificate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->