பெற்றோர்களே உஷார்.. 2 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி‌.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள எடப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் நதியா. இவரது சகோதரி சத்யா. இவர் அரியலூர் மாவட்டம் செந்துரியில் தங்கி இருந்து பல பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது 2 குழந்தைகளை தனது சகோதரி நதியா வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார். அதில், 2 வயது குழந்தை ஹரிகிருஷ்ணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது தையல் மிஷினுக்கு வைத்திருந்த ஸ்விட்ச் பாக்ஸ் பிளக்கில் திடீரென கை வைத்துள்ளான். இதில் மின்சாரம் தாக்கி குழந்தை அலறி துடித்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நதியா குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிர் இருந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நதியா தனது சகோதரி சத்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த சத்தியா தனது உயிரிழந்த குழந்தையை பார்த்து கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 years old baby death in current shock


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->