தாய்மார்களே உஷார்.. தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 2 வயது குழந்தை பலி.!
2-year-old child died after drowning in a bucket of water
நீலகிரி மாவட்டம் பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவருக்கு பிரிஜோத் என்ற மனைவியும் 2 வயது பெண் குழந்தையும் இருந்தது.
இந்த நிலையில் அந்த குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தை காணாமல் போனதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் குழந்தை காணாததால் குழந்தையை யாரோ திருடி விட்டார்களா என்று அச்சமடைந்தனர். இந்த நிலையில் குளியல் அறையின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே சென்றனர் அங்கு அந்த குழந்தை பாலியல் தலைகீழாக இருந்து கிடந்துள்ளது.
இதனைப் பார்த்த பெற்றோர் கதறி அழுந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2-year-old child died after drowning in a bucket of water