தெருவில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் நகை பறிப்பு - கையும் களவுமாக பிடிபட்ட வட மாநில வாலிபர்கள்.!!
2 north indians arrested for gold robbery in thiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் வீராசாமி நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவருடைய மனைவி சத்யா. இவர், நேற்று மாலை எளாவூர் ரெயில் நிலையத்தையொட்டிய தொம்பரை ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வடமாநில வாலிபர்கள் சத்யா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றனர்.
உடனே சத்யா கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வட மாநில வாலிபர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தங்கச் சங்கிலி பறித்தது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 north indians arrested for gold robbery in thiruvallur