வந்தவாசி அருகே சாலையோர தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி...! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கிருத்திக் (20), எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த பிரியதர்ஷன் (20) ஆகிய இருவரும் நண்பர்கள். சென்னை மற்றும் தஞ்சையில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்த இவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை கோவிலுக்குச் சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஏந்தல் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளது.

இதனால் நிலைதடுமாறிய இவர்களது மோட்டார்சைக்கிள் சாலையோர தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கிருத்திக் மற்றும் பிரியதர்ஷன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த வடவணக்கம்பாடி போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 college students killed after motorcycle hits roadside barrier near Vandavasi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->