6 ஆண்டுகளில் தேர்தலில் பங்கேற்காத 14 கட்சிகள் நீக்கம் – பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் 6 ஆண்டுகளில் தேர்தலில் பங்கேற்காத 14 கட்சிகள்   பட்டியலில் இருந்து நீக்கத் செய்வதற்கான பணிகள்  தேர்தல் ஆணையம் தொடங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத 14 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) தேர்தல் ஆணையம் பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் Show Cause Notice அனுப்ப உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, தகுதியற்ற கட்சிகள் நீக்கப்படும்.

நீக்கப்படவுள்ள கட்சிகளில் சில:ஆல் இந்தியா ஆதித்தனார் மக்கள் கட்சி,உமண்ஸ் டெமாகிராட்டிக் ப்பீரீடம் பார்டி,அம்பேத்கர் பிபுல்ஸ் மூவ்மென்ட்,காமராஜ் மக்கள் இயக்கம்,மீனவர் மக்கள் முன்னணி,தமிழ் மாநில கட்சி,வளமான தமிழகம் கட்சி, மற்றும் பல.மக்களாட்சி பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29ன் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், வரிவிலக்கு உள்ளிட்ட பல நன்மைகளை பெறுகின்றன. ஆனால், தேர்தலில் பங்கேற்காமல், கட்சி நடவடிக்கைகள் இல்லாமல் உள்ளவை, அரசியல் அமைப்பை மாசுபடுத்தும் வகையில் இருக்கின்றன.

இந்திய தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் இதேபோல் சோதனை நடத்தி, தேவையற்ற கட்சிகளை அழிப்பதன் மூலம் அரசியல் சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 parties that did not participate in the elections for 6 years removed - Election Commission has released the list


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->