60 வயதிற்கு மேற்பட்ட 130 அம்மா உணவக பணியாளர்கள் டிஸ்மிஸ்..!! செலவு குறைக்கும் நடவடிக்கை என மாநகராட்சி விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு  மலிவு விலை அடிப்படையில் உணவு வழங்க அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தலா இரண்டு உணவகங்கள் திறக்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு வரப் பிரசங்கமாக அம்மா உணவகம் இருக்கின்றது.

கொரோனா காலகட்டத்தில் பசியை போக்கும் இடமாக அம்மா உணவகங்கள் விலங்கின. சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் 4000 மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அம்மா உணவகங்கள் லாப நோக்கம் இல்லாமல் மக்களின் சேவைக்காகவே கொண்டுவரப்பட்டதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கணக்கு தணிக்கை நிலை குழு தலைவர் தனசேகரன் சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் நஷ்டத்தில் அம்மா உணவகங்கள் இயங்குகிறது. தற்பொழுது வரை 756 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார். மேலும் 500 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகும் அம்மா உணவகங்களை மூட வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருந்தார்.

இந்த நிலையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த 60 வயதிற்கு மேற்பட்ட 130 பணியாளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகப்படியாக அம்பத்தூர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் பணியாளர்கள் நீக்கம் நடைபெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பெயரில் பணிநீக்கம் செய்ததாக மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் "அம்மா உணவகங்களில் விற்கப்படும் உணவுகளை ஹோட்டல்களுக்கு விற்பது, பொருட்களை திருடுவது போன்ற குற்றச்சாட்டுகள் மீது தீவிர கண்காணிப்பு நடத்தி தவறு செய்த ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியின் செலவை குறைக்க தவிர்க்க முடியாத நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்டோர் நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் முதியவர்களாக இருப்பதால் மாற்றுப் பணி வழங்குவது குறித்து இதர துறைகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

130 Amma umavagam employees dismissed by Chennai Corporation


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal