தவெக பக்கம் நகரும் டிடிவி தினகரன்! பாஜகவுக்கு டிடிவி தினகரன் சொன்ன நிபந்தனை..கையை பிசையும் அண்ணாமலை? - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணையுமாறு கடந்த சில மாதங்களாக பாஜக தரப்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது அமமுக தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அந்த பேச்சுவார்த்தைகள் சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டிடிவி தினகரன் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பக்கம் நகரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக இடம்பெற்றிருந்தது. அந்த காலகட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட டிடிவி தினகரன், பின்னர் அதிமுக–பாஜக கூட்டணி உருவானதும், எடப்பாடி பழனிசாமிக்காக பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார். ஆனால் குறுகிய காலத்திலேயே, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி, என்டிஏவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாஜக தரப்பில், குறிப்பாக அண்ணாமலை வழியாக, டிடிவி தினகரனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லாததால், அந்த முயற்சிகள் முன்னேறவில்லை. இதனால் பாஜக தலைமையும் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், டிடிவி தினகரன் திடீரென “எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அமமுகவே போட்டியிடும்” என்று அறிவித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முசிறி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரனை வேட்பாளராக அறிவித்ததும், என்டிஏ கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இதனால், பாஜக தரப்புடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில், அமமுக கேட்கும் குறிப்பிட்ட தொகுதிகள் வழங்கப்பட்டால்தான் என்டிஏவில் இணைவோம் என்ற நிபந்தனையை டிடிவி தினகரன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிபந்தனைகள் பாஜக தலைமையை சங்கடப்படுத்தியுள்ள நிலையில், தினகரனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், தவெக தரப்பால் மட்டுமே டிடிவி தினகரன் எதிர்பார்க்கும் அளவிலான தொகுதி ஒதுக்கீட்டை வழங்க முடியும் என்ற கணிப்பும் நிலவி வருகிறது. ஏற்கனவே செங்கோட்டையன் வழியாக விஜய் தரப்பு, அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பின்னணியில், பொங்கலுக்குப் பிறகு விஜய் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் தோன்றும் அரசியல் காட்சியை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் வலுப்பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dinakaran moving towards Tvk TTV Dinakaran condition to BJP Will Annamalai wring its hand


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->