அதிகாரிகள் போல நடித்து கைவரிசையை காட்டிய மர்மநபர்கள்.! கொள்ளையன் புகைப்படத்துடன் போலீசார் விடுத்த அதிரடி அறிவிப்பு!!
12 crores jewels robbery in paranur kanjipuram
சென்னை அண்ணா சாலையில் தொழிலதிபர் கிரண் ராவ் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் நகை கண்காட்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது நகைக்கடை சார்பில் பாரம்பரிய பொருட்கள் மற்றும் நகை கண்காட்சி மதுரையில் நடைபெற்றது. நகைக்கடையின் பொது மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் கண்காட்சி முடிந்தவுடன் காரில் ரூ.11 கோடி மதிப்பிலான நகை, ரூ.7½ லட்சம் பணத்துடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் என்ற இடத்தில் மர்மநபர்கள் சிலர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது இதற்கான முறையான ஆவணங்கள் இல்லை அதனை கிண்டி சிலைகடத்தல் பிரிவில் கொண்டுவந்து காட்டிவிட்டு நகைகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றுள்ளனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் மர்ம நபர்கள் சிலர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
பின்னர் இது குறித்து செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அங்குள்ள சோதனை சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்த போலீசார் கொள்ளையன் என்று சந்தேகப்படும் நபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவற்றுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.மேலும் தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
12 crores jewels robbery in paranur kanjipuram