10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ஆம் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


நடப்பு கல்வியாண்டிற்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2026 வரும் புதன்கிழமை (மே-20-ஆம் தேதி) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வினை 08 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் எழுதியுள்ளனர்.

தேர்வு எழுதியவர்கள் (TNRESULTS.NIC.IN, DGE.TN.GO.IN, RESULTS.DIGILOCKER.GOV.IN ) ஆகிய  இணையதளங்களிலும், பயின்ற பள்ளிகளிலும், 78452 52525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாகத் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.

அத்துடன், மாணவர்களின் கைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகத் தேர்வு முடிவுகள் அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 09 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, நடப்பு கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 08-ஆம் தேதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th Grade Public Examination Results to be Released on May 20


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->