டெல்டா மாவட்டங்களில் கனமழை: வீடுகளில் புகுந்த மழை நீர்; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
Trees and electric poles have toppled in the Delta districts due to heavy rains
டெல்டா மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பொதுமக்களை இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கனமழை காரணமாக திருச்சியில் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் மழை கொட்டிய நிலையில், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.
குறிப்பாக நாகையில் நேற்று மாலை 05 மணி முதல் இரவு வரை சாரல் மழை கொட்டித் தீர்த்துள்ளது. மயிலாடுதுறையில் அவ்வப்போது சாரல் மழை பெய்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. அத்துடன், குடந்தையில் மாலை முதல் இரவு 08 மணிக்கு வரை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

மேலும், தஞ்சையில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை விட்டு விட்டு மழை பெய்ததோடு, மாலை இடைவிடாத பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அடுத்ததாக, கரூர் மாவட்டம் கடவூர் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 03 மணி அளவில் திடீரென மேக மூட்டம் ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து, குளித்தலையில் நேற்று மதியம் திடீரென காற்றுடன் கூடிய மழை காரணமாக குளித்தலை பெரிய பாலம் அருகே சாலையோரம் இருந்த மரம் மின்கம்பங்கள் சாய்ந்தது. இதில் அப்பகுதியிலிருந்த மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், பாளையம், செஞ்சேரி, ஆலம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது. அடுத்து, அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் மாலையில் மழை பெய்தது.

அதேப்போன்று, திருச்சியில் 02-வது நாளாக நேறு மழை பெய்தது. குறிப்பாக, மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மலைக்கோட்டை பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மழைநீர் புகுந்துள்ளது.
மேலும், தொட்டியம், தா.பேட்டை, துறையூர், முசிறி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதில் முசிறியில் மழையால் திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் திருஈங்கோய்மலை அருகே சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இந்த மழையினால் குறுவை சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Trees and electric poles have toppled in the Delta districts due to heavy rains