உதகை மலர் கண்காட்சி 2026: நாளை நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128-வது மலர் கண்காட்சி நாளை  தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்த சர்வதேச அளவிலான மலர் கண்காட்சி வரும் 28-ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட மக்கள் அனைவரும் இந்த மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்கும் விதமாக, நாளை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறை அறிவிப்பின் காரணமாக, நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, வரும் ஜூன் மாதம் 06-ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாக இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Local Holiday in the Nilgiris District Tomorrow


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->