அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி; சி.என்.ஜி. கியாஸ் விலை மீண்டும் உயர்வு..!
CNG gas prices rise once again
ஈரான் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் போர் சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அதன்படி, கடந்த 15-ஆம் தேதி அதிரடியாக பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. விலை உயர்ந்தது. முன்னதாக 14ஆம் தேதி வரை, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் 15-ஆம் தேதி முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.95.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.67க்கும், டீசல் ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.93.14க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில், கடந்த 15ஆம் தேதி டெல்லியில் சி.என்.ஜி. விலை ரூ. 2 உயர்ந்து, டெல்லி ஒட்டியுள்ள நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய பகுதிகளில் ஒரு கிலோ சி.என்.ஜி. ரூ. 87.70 என விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ சி.என்.ஜி. ரூ. 88.70 என விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
CNG gas prices rise once again