பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி; முதல்வர் விஜய் ஸ்டைலை ரீ கிரியேட் செய்து கொண்டாடிய வெங்கடேஷ் ஐயர்; வைரலாகும் வீடியோ..!
Bengaluru advances to the playoffs after defeating Punjab while Venkatesh Iyer celebrates by recreating Chief Minister Vijays signature style
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
அணியின் சார்பில் கிங் கோலி அரைசதம் கடந்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். படிகல் 45 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 73 ரன்களும், டிம் டேவிட் 28 ரன்களும் எடுத்தனர்.
பஞ்சாப் அணி சார்பில் ஹர்ப்திப் பிரார், 02 விக்கெட்டினையும், அர்ஷிதீப் சிங், சாஹல் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி, 04 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது.
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து199 ரன்கள் மட்டுமே எடுத்து 06 முறையாக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் அணியாக பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் விஜய் ஸ்டைலில் தனது அரைசதம் கொண்டாத்தை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் 40 பந்துகளில் 08 பவுண்டரிகள் மற்றும் 04 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த ஐபிஎல் 2026 தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அவரது 13-வது அரைசதமாகும். வெங்கடேஷ் ஐயர் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தவுடன், மைதானத்திலேயே தமிழக முதலமைச்சர் விஜய்யின் மெர்சல் பட சீனை மீண்டும் ரீ கிரியேட் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
English Summary
Bengaluru advances to the playoffs after defeating Punjab while Venkatesh Iyer celebrates by recreating Chief Minister Vijays signature style